×

புரெவி புயல் எதிரொலி தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கரூர், டிச. 4: புரெவி புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான நிவர் புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் புதிதாக உருவாகி உள்ள புரெவி புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து சாரல் மழை போல மழை பெய்ததால் கரூர் மாவட்டமே நேற்று ஜில்லென்ற சீதோஷ்ணநிலைக்கு மாறியது.தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் எனவும் கூறப்படுகிறது.


Tags : storm ,
× RELATED தூங்கிய மூதாட்டியிடம் 4 பவுன் செயின்...