×

விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி

வேதாரண்யம், டிச.4: கத்தரிப்புலத்தில் கடந்த 2009ம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ, மாணவிகள் ஒரு ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்ததையொட்டி 11ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags : accident ,
× RELATED வெட்டிய மரங்களுக்கு அஞ்சலி