×

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்

வேதாரண்யம்,டிச.4: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வேதாரண்யம் வந்துள்ளனர்.
இலங்கையில் புரெவி புயல் கரை கடந்த நிலையில் வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, கோடியகரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக உள்ளது.கடல் நீரும் மழை நீரும் மீனவ கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் வடிய வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் நோக்கி புயல் செல்லும் நிலையில் வேதாரண்யம் பகுதியில் புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் 47 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டுள்ளனர். புயல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் சேதங்கள் இருந்து உடனடியாக மக்களை மீட்க தயாராக உள்ளோம் என தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.

Tags : Veda ,National Disaster Rescue Team Camp ,
× RELATED விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக...