×

நாகை மாவட்டத்திற்கு நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை

நாகை,டிச.4: நாகை மாவட்டத்திற்கு நாளை (5ம் தேதி) திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகிறது. எனவே கட்சியினர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை மனுவாக அளிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நாகை தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு பொருளாளர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மனோகரன் வரவேற்றார். எம்எல்ஏ மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மேகநாதன், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக்கம், தீர்மானங்கள் குறித்து மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் பேசினார்.

நாகை தெற்கு மாவட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் இருந்து தொடங்க உத்தரவிட்ட தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. திருக்குவளையில் தொடங்கி நாகை தெற்கு மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம், கழக கொடி ஏற்றுதல், இளைஞர் அணியினருடன் கலந்துரையாடல், மறைந்த கழகத்தின் மூத்த முன்னோடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிப்பது. நாகை தெற்கு மாவட்டத்தில் எல்லோரும் நம்முடன் இணைய வழி உறுப்பினர் சேர்த்தலை அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதியிலும் மேலும் துரிதப்படுத்தி அதிக அளவில் கழகத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும், அத்துடன் இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்தலையும் துரிதப்படுதிடுவது, திமுக சார்பில் சட்ட மன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாகை மாவட்டத்திற்கு நாளை (5ம் தேதி) மயிலாடுதுறை வருகை தர உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் நாகை தெற்கு மாவட்டத்திற்கு திமுக. ஆட்சிக்கு வந்த உடன் செய்து தர வேண்டிய பணிகள் குறித்து மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் தங்கள் பகுதியின் கோரிக்கைகளை மனுவாக வழங்க கேட்டுக்கொள்வது. தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் சேர்தல் மற்றும் நிக்கல் மற்றும் சரிபார்பு பணி செய்து வருகிறது. வரும் 12, 13ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கழக வாக்குச்சவாடி நிலை முகவர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் கழகத்தை சேர்ந்த புதிய வாக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் அனைவரையும் சேர்த்திட வேண்டும். வாக்காளர் பட்டியலில் கழகத்தை சேர்ந்தவர்கள் பெயர்கள் உள்ளதா என்றும் சரிபார்த்திட வேண்டுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : DMK ,election report preparation team ,district ,Nagai ,
× RELATED திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 5ம் கட்ட சுற்றுப்பயணம்