×

அரசியலுக்கு வரவேண்டி விஜய் ரசிகர்கள் 3 பேர் மொட்டை அடித்து வழிபாடு

மயிலாடுதுறை, டிச.4: அரசியலுக்கு வரவேண்டி விஜய் ரசிகர்கள் 3 பேர் மொட்டை அடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 29வது ஆண்டு துவங்குவதையடுத்தும், அரசியலுக்கு வரக்கோரியும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர ஆலய வளாகத்தில் மொட்டை அடித்து வழிபாடு நடத்தினர். மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் 3 ரசிகர்கள் மொட்டை அடித்து கொண்டனர். தொடர்ந்து பரமளரெங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, ரஜினி அரசியல் வருகையை அறிவித்ததை அடுத்து, விஜய் ரசிகர்களின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Tags : Vijay ,fans ,
× RELATED பஸ்சை வழிமறித்து இடையூறு செய்ததால்...