×

புதுச்சேரி அமைச்சர் ஆய்வு பழையார் சுனாமி நகரை மழைநீர் சூழ்ந்தது

கொள்ளிடம், டிச.4: கொள்ளிடம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டு விட்டு லேசான மழை முதல் கனமழை பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது.இதனால் அனைத்து மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அனைவரும் கிராமங்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். கொள்ளிடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை வடிய வைக்கும்பணிகள் ஒவ்வொரு ஊராட்சி சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகம் அருகே பக்கிங்காம் கால்வாய் வழியே தண்ணீர் புகுந்து பழையார் சுனாமி நகரிலுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. பழையாறு புதுநகரில் உள்ள 20 குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ளவர்கள் அருகாமையில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று தங்கி உள்ளனர். பழையாறு மீன்பிடி துறைமுகம் படகு அணையும் தளத்தில் காற்று வேகமாக வீசியதால் அனைத்து விசை படகுகளும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டுள்ளது.சீர்காழி:சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி கீழமூவர் கரை, மேல மூவர் கரை பகுதிகளில் தொடர் மழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

Tags : Puducherry Minister ,Palaiyar ,
× RELATED புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன்...