×

சாலையின் குறுக்கே மரம் விழுந்தது கைக்குறிச்சி பாரதி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி 12வது பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை, டிச.4: கைக்குறிச்சி  பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.புதுக்கோட்டை கைக்குறிச்சி  பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கடந்த 28ம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் எல்.தாவூத்கனி, தாளாளர்கள் ஏ.லியோ பெலிக்ஸ்லூயிஸ், கே.பசீர்முகமது, டி.அருள்சாமி, கே.கனகராஜன், நிர்வாக அறங்காவலர்கள் அ.கிருஷ்ணமூர்த்தி, கே.கான்அப்துல்கபார் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.குமுதா தொடக்கவுரையாற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர்.தங்கம்மூர்த்தி கலந்து கொண்டு 330 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கடந்த 29ம் தேதி நடைபெற்ற இரண்டாம் நாள் பட்டமளிப்பு விழாவில் 332 பேர் பட்டம் பெற்றனர்.

Tags : road ,
× RELATED மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி