×

புரெவி புயல் எதிரொலி புதுகை மாவட்டத்தில் தொடர் மழை

புதுக்கோட்டை, டிச.4: புரெவிபுயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது. நேற்று காலை முதல் சூரியன் தெரியாத வகையில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் காணப்பட்டன. இதனால் குளிர்ந்த நிலையே நீடித்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.புதுக்கோட்டைநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக புதுக்கோட்டை நகர்முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் மழைகோட் அணிந்தும் சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை பஸ்நிலையம், ரெயில் நிலையங்கள், உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்றுமுழுவதும் பெய்த மழையின் காரணமாக நகர் பகுதியில் பெருவாரியான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக டிவிஎஸ் கார்னர் பகுதியில் மழைநீர் குடியிருப்புக்குள் குளம்போல் தேங்கியுள்ளது. இது பன்றிகளுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இதனால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராம பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தற்போது தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புரவி புயலால் புதுக்கோட்டை கிராம பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் விவசாயத்திற்கு தேவையான மழைநீர் கிடைக்கும். இதனால் விவசாயிகள் இன்னும் மழை வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.கறம்பக்குடி:
கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை பெய்த மழையால் சாலைகள் நகர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Tags : storm ,Pudukkottai district ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்