×

மாத்தூர் அருகே கோயில் விழாவில் பெண் தவறவிட்ட 3 பவுன் செயின் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, டிச.4: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே மலம்பட்டியில் உள்ள சவேரியார் கோயிலில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி மனைவி அஞ்சலை என்பவர் தனது 3 பவுன் சங்கிலி, ரூ.2,000 ரொக்கத்துடன் தனது கைப்பையை தவற விட்டுள்ளார்.இதுகுறித்து கோயிலில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. பின்னர், வழியில் கிடந்ததாக அங்கு காலணி வியாபாரத்துக்காக சென்றிருந்த பெருங்களூரைச் சேர்ந்த மணி (45) என்பவர் எடுத்து சென்று மாத்தூர் போலீரிடம் ஒப்படைத்தார். பின்னர், அஞ்சம்மாளிடம் பையை ஒப்படைத்ததோடு, மணியின் மனிதநேய செயலை போலீஸார் பாராட்டினர்.

Tags : Mathur ,temple ceremony ,
× RELATED திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு