×

போக்குவரத்து விதிகளை மீறிய 95,567 வழக்கு முடித்து வைப்பு: அபராதமாக ரூ.3.77 கோடி வசூல்

சென்னை: சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் நாள் ஒன்றுக்கு 169 இடங்களில் போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளை கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த திடீர் வாகன வாகன சோதனையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 198 வழக்குகள், எல்லைக்கோட்டை தண்டுகள், போக்குவரத்து விதிகளை மீறியது, பைக்கில் 3 பேர் பயணம் செய்தது உள்ளிட்ட மொத்தம் 17,800 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து அபராதமாக இணையதளம் வாயிலாக ரூ.66 ஆயிரத்து 84 ஆயிரத்து 120 வசூலிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் ஹெல்மெட் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95,567 வழக்குகள் முடித்துவைத்து, அபராதமாக ரூ.3 கோடியே 77 லட்சத்து 16 ஆயிரத்து 320 போக்குவரத்து போலீசார் சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து விதிகளை மீறிய 95,567 வழக்கு முடித்து வைப்பு: அபராதமாக ரூ.3.77 கோடி வசூல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…