×

8ம் வகுப்பு தனித்தேர்வு 31ம் தேதி முதல் இணையத்தில் ஹால்டிக்கெட்

சென்னை: எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 31ம் தேதி முதல் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் தேர்வுகள் நடக்க இருக்கிறது. அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் 31ம் தேதி பிற்பகலில் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவியர் மேற்கண்ட இணையத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணைய தளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் என்ற தலைப்பின் கீழ் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post 8ம் வகுப்பு தனித்தேர்வு 31ம் தேதி முதல் இணையத்தில் ஹால்டிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...