64 லட்சம் கிமீ தூரம் உலகிலேயே இந்தியாவில்தான் 2வது நீளமான சாலைகள்

புதுடெல்லி: உலகிலேயே இந்தியாவில் தான் 2வது நீளமான சாலைகள் உள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது:  இந்தியாவில் தற்போது 64 லட்சம் கிமீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இது 2வது இடம் ஆகும். உலகில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. அங்கு 68 லட்சம் கிமீ தூரத்திற்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது 2வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் 1,42,240 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013-14ல் தேசிய நெடுஞ்சாலைகள் 91,287 கிமீ தூரம் போடப்பட்டு இருந்தன. மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 59 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதனால் டோல்கேட் வருவாய் அதிக அளவு உயர்ந்து உள்ளது. 2013-14ல் ரூ.4770 கோடியாக இருந்த டோல்கேட் வருமானம் இப்போது ரூ.51 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது 2030ம் ஆண்டு ரூ.1.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும். பாஸ்டேக் மூலம் டோல்கேட்டுகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் 47 விநாடிகளாக குறைந்து இருக்கிறது. இதை 30 விநாடிகளாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

The post 64 லட்சம் கிமீ தூரம் உலகிலேயே இந்தியாவில்தான் 2வது நீளமான சாலைகள் appeared first on Dinakaran.

Related Stories: