×

42 ஆண்டு கால வரலாற்றில் வரட்டுப்பள்ளம் அணை மே மாதத்தில் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தோனிமடுவு, கும்பரவாணி, வரட்டுப்பள்ளம் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று அதிகாலை அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேறி அந்தியூரில் உள்ள பெரிய ஏரிக்கும், கெட்டிசமுத்திரம் ஏரிக்கும் செல்ல தொடங்கியுள்ளது.கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அணை நிரம்பியது. இந்த நிலையில் 7 மாதத்தில் அணை மீண்டும் நிரம்பி உபரி நீர் மேற்குக் கரைப் பகுதியில் வெளியேறி வருகிறது. அணை நிரம்பி ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் 42 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் அணை நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது….

The post 42 ஆண்டு கால வரலாற்றில் வரட்டுப்பள்ளம் அணை மே மாதத்தில் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Varatuppallam dam ,Andyur ,Western Ghats ,Erode district ,Varattupallam dam ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழை தீவிரம் பிஏபி...