- சர்வதேச முன்னாள் மாணவர் சிம்போசியம் பகிர்வு நினைவுகள்
- திருச்சி
- மறுவாழ்வு ஆராய்ச்சி துறை
- ஹோலி கிராஸ் கல்லூரியின் மறுவாழ்வு ஆராய்ச்சி துறை
- தின மலர்
திருச்சி, மார்ச் 3: திருச்சியில் மறுவாழ்வியல் ஆராய்ச்சித் துறையின் 40 ஆண்டுகால நினைவுகளைச் சிறப்பிக்கும் மகிழ்வில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி புனித சிலுவை கல்லூரியின் மறுவாழ்வியல் ஆராய்ச்சிதுறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகளுக்கான புதுமையை உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய நிலையான உலகத்தை உருவாக்கும் 40 ஆண்டுகளுக்காள பணியின் செயலாக்கத்தைச் சிறப்பிப்பதை மையமாகக் கொண்டது இக்கருத்தரங்கம்.
இத்துறையின் அடித்தளமாகத் திகழ்ந்த அருள் சகோதரி எலிசபெத் ரோஸ், அருள் சகோதரி மரிய கமலம் மற்றும் முனைவர் பிரபாகர் உள்ளிட்டவர்களை மறுவாழ்வியல் துறைத்தலைவர் இணைப் பேராசிரியர், முனைவர் டியூரின் மார்டினா வரவேற்று பேசினார். அத்துறையின் முக்கியத்துவத்தையும், துறையின் சிறந்த செயல்பாடுகளையும் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஸ்வர்ணகுமாரி எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பன்னாட்டு கருத்தரங்கின் இதழ் வெளியிடப்பட்டது.
மேலும் மறுவாழ்வுத்துறையின் அனைத்து இயக்க நிலைகளையும், இயங்கு தளங்களையும் பாராட்டும் விதமாய் கல்லூரியின் செயலர் முனைவர் அருள்சகோதரி ஆனி சேவியர் மற்றும் சோனி வர்கிஸ் தாமஸ் வாழ்த்துரை வழங்கினார். பன்னாட்டுத் கருத்தரங்கத் துவக்கவுரையை கல்லூரி முதல்வர் முனைவர் அருள் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி வழங்கி சிறப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் டாக்டர் சச்சு ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தின் தலைமையுரையை அருட்பணியாளர் ஆரோக்கியராஜ் வழங்கினார். 40 ஆண்டு கால வளர்ச்சி பாதைகள் காட்சிப் படங்களாகத் திரையிடப்பட்டது.
இக்கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 5 அமர்வுகளில் 60 கட்டுரைகள் கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளைக் காட்சிபடுத்தியது. ‘சந்திப்போமா 2024’ என்ற மறுவாழ்வுதுறையின் நிகழ்வானது 175 முன்னாள் மாணவர்களை மீண்டும் ஒருங்கிணைத்திருந்தனர். இதில் 40 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு சமூக மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை எளிதாக்கும் வகையில் அமைந்தது. மேலும் சைகை மொழி மற்றும் இசையால் செழுமைப்படுத்தப்பட்ட மறுவாழ்வு கீதம் மற்றும் சக்திவாய்ந்த உள்ளடக்கத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்தது.
The post 40 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்களின் பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.