×

சிலிண்டர் வெடித்து பிஆர்எஸ் தொண்டர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருமலை: தெலங்கானா கம்மம் மாவட்டம் காரேப்பள்ளி மண்டலம் சீமலப்பாடு நகரில் நடைபெற்ற பிஆர்எஸ் கூட்டத்தில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். இதில் தீப்பொறி அருகில் இருந்த குடிசை வீட்டில் விழுந்தது. இதில் குடிசை தீ பிடித்து அதில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார் படுகாயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்கள் கம்மம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பி.ஆர்.எஸ். கட்சியினர் 3 பேர் இறந்தனர்.

4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாடா அஜய் குமார் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சம் நிதியுதவியுடன் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு முழுமையாக ஏற்கப்படும் என்றார்.

The post சிலிண்டர் வெடித்து பிஆர்எஸ் தொண்டர்கள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,PRS ,Seemalapadu Nagar, Kharepalli Mandal, Telangana Khammam district ,
× RELATED பத்ராத்திரி கொத்தக்கூடம்...