×

37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் அசந்து தூங்கிய விமானிகள்: கதி கலங்கிய அதிகாரிகள்

புதுடெல்லி: பேருந்து, ரயிலில் பயணம் செய்வது போன்று விமான பயணம் இல்லை. குறிப்பிட்ட உயரத்தை விமானம் அடைந்துவிட்டால் சுற்றிலும் மேகமூட்டம்தான் தெரியும். இதனால், பெரும்பாலும் பயணிகள் தூங்கி விடுவார்கள். விமானிகள் தூங்கி விட்டால் என்னவாகும்?  விமானம் விபத்தில் அல்லவா சிக்கிக் கொள்ளும் என நினைப்போம். உண்மையில் அப்படி இல்லை. விமான பயணத்தின்போது விமானிகளும் ஓய்வெடுக்க அனுமதி இருக்கிறது. நீண்ட நேரம் பயணம் செய்யும் விமானங்களில், ‘ஆட்டோ பைலட்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், விமானம்  பறந்து கொண்டே இருக்கும். யாரும் அதை இயக்கத் தேவையில்லை. ஆனால், ஒரு விமானி தூங்கும் போது மற்றொரு விமானி விழித்திருக்க வேண்டும். ஆனால், எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம், சூடானில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா சென்றபோது 2 விமானிகளும் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது ‘ஆட்டோ பைலட்’ போட்டு விட்டு மணி கணக்கில் தூங்கியுள்ளனர். அடிஸ் அபாபாவில் இறங்க வேண்டிய விமானம், தொடர்ந்து 37 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதை கண்ட விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கதி கலங்கினர். விமானிகளை தொடர்பு கொண்டனர். ஆனால், அவர்களிடம் இருந்து பதில் இல்லை. பின்னர், ஆட்டோ பைலட்டில் விமானம் இயங்குவதை கண்டுபிடித்து, அது துண்டிக்கப்பட்டதால் எச்சரிக்கை ஒலி கிளம்பியது. இதை கேட்டு எழுந்த விமானிகள், விமானத்தை மீண்டும் திருப்பி வந்து 25 நிமிடங்கள் தாமதமாக தரையிறக்கினர். இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது….

The post 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் அசந்து தூங்கிய விமானிகள்: கதி கலங்கிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...