×

37 அரசு கலைகல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் இணை பேராசிரியர்களை, 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்களாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி, பெரியார் ஈவெரா கல்லூரி தமிழ்துறை, இணை பேராசிரியர் வாசுதேவன், வேலூர் அரசு கல்லூரிக்கும், திருச்சி ஈவெரா கல்லூரி தமிழ் துறை இணை பேராசிரியர் கலைச்செல்வி, அரியலூர், ஜெயங்கொண்டன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, பாரதி மகளிர் கல்லூரி, உயிர்வேதியியல் துறை இணை பேராசிரியர் பாத்திமா, ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, ராணிமேரி கல்லூரி தமிழ் துறையின் இணை பேராசிரியர் கலைமங்கை வடசென்ைன பயிற்சி மையத்திற்கும், வேலூர், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, வணிகவியில் இணை பேராசிரியர் தரன் ஓசூர் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிக்கும், அதே கல்லூரியின் வரலாறுத் துறை இணை பேராசிரியர் ராஜேந்திரன் கூடலூர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிக்கும், சென்னை, மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் பாக்கிய மேரி கடலூர், டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதைப்போன்று சென்னை, பாரதி மகளிர் கல்லூரியின் உயிர்-வேதியியல் துறை இணை பேராசிரியர் பிரேமலதா மதனூர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, பாரதி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் பரிமளா பர்கூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, அகில இந்திய சிவில் சர்விஸ் பயிற்சி மைய வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் தங்கராஜன், சென்னை அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திற்கும், சென்னை, நந்தனம் தாவரவியல் துறை இணை பேராசிரியர் முசிரா பாத்திமா, விழுப்புரம், வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, ராணி மேரி கல்லூரி, சமூகவியல் துறை இணை பேராசிரியர் சக்தி, பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, பாரதி மகளிர் கல்லூரி உயிர்வேதியியல் துறை இணை பேராசிரியர் விஜயலட்சுமி, சீர்காழி எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், சென்னை, மாநிலக் கல்லூரி, வரலாற்று துறை இணை பேராசிரியர் செல்வ முத்து குமாரசாமி, வால்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் என தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இணை பேராசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்களை 37 கல்லூரியின் முதல்வர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது….

The post 37 அரசு கலைகல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்