×

35.82 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ₹35.82 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு, கட்டிடங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் ₹35.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்பு கிடங்குகள், அலுவலக கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை திறந்து வைத்தார். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் ₹25 கோடி செலவில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் கிராமத்தில் ₹2.65 கோடி செலவில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், என மொத்தம் ₹35.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகள், அலுவலக கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post 35.82 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : chief minister ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED “நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை...