×

கடந்த 3 மாதங்களில் 200 போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அவனியாபுரம்: கடந்த 3 மாதங்களில் 200 போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:கொரோனா பரவல் தற்போது இல்லை. எஸ்பிபி1.16 என்கிற வைரஸ் 2 மாதங்களாக பரவியதால் 11 ஆயிரம் வரை இந்தியாவில் உயர்ந்தது. தமிழகத்தில் 500க்கும் மேலாக இருந்தது.இந்த வைரஸை பொறுத்தவரை வீரியம் குறைவாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் நான்கைந்து நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று நடந்து கொண்டால் சரியாகிவிடும். உயிரிழப்பு இல்லாத நிலையில், தற்போது பரவல் குறைந்து கொண்டே வருகிறது.

சிஏஜி அறிக்கை பட்டியலில் எந்தெந்த துறைகளில் யார், யார் எந்த மாதிரியான தவறுகள் செய்துள்ளார்கள் என்பதை 40 நிமிடம் வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். பள்ளி கல்வித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஆகியவற்றில் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறியுள்ளோம்.கடந்த ஆட்சிக்காலத்தில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். இந்த 2, 3 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post கடந்த 3 மாதங்களில் 200 போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Avaniyapuram ,Subramanian ,Ma ,
× RELATED மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக...