×

3 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்

பெங்களூர்: ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகாவில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு. ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் முறையாக கர்நாடகா செல்கிறார். கர்நாடக வரும் அவர் முதலில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் தசரா விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஹூப்ளியில் ஹூப்ளி -தர்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பூர சன்மனா’ என்ற பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தனது பயணத்தின் 2-வது நாளில் தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை திறந்து வைக்கிறார். அதே நாளில், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். மேலும் பெங்களூருவில் கர்நாடக அரசு வழங்கும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகா பயணத்தை முடித்து கொண்டு செப்டம்பர் 28-ம் தேதி புதுடெல்லி திரும்புகிறார்….

The post 3 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார் appeared first on Dinakaran.

Tags : President Troubati Murmu ,Karnataka ,Bangalore ,Dinakaran ,
× RELATED மூடா முறைகேடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு தள்ளுபடி