×

3வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்ட 55,052 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  சென்னை மருத்துவ கல்லூரியின் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 55,052 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 2,200 படுக்கையில் தற்போது 115 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கரும்பூஞ்சை நோயால் 3,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 778 பேர் அனுமதிக்கப்பட்டு, 216பேர் குணமடைந்தனர். புதிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி அளித்தால் டெல்லி செல்வோம். அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக நீர்நிலைகளில் கொசுக்களை அழிக்க டிரோன்களை பயன்படுத்தி கொசு உற்பத்தியை தடுத்து வருகிறோம். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 2,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தடுப்பூசி குறித்து வலியுறுத்தவுள்ளார். தமிழகத்திற்கு இதுவரை 1,59,26,050 தடுப்பூசி வந்துள்ளது. அதில் 1,59,58,420 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1,74,730 கையிருப்பில் உள்ளது.  அடுத்து 11ம் தேதி தான் தடுப்பூசிகள் வர உள்ளது. மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை டெண்டர் எடுக்க யாரும் முன் வராதது கடந்த ஆட்சி காலத்தில் தான், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உற்பத்தி மையத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினர். மேலும் தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போது கூட வலியுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post 3வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : 3rd wave ,Minister ,M. Subramanian ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,Tamil Nadu ,third wave ,Subramanian ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...