×

யானை மிதித்து, காளை முட்டி 2 விவசாயிகள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் (55). விவசாயியான இவர் பூவகவுண்டன் ஏரி பகுதியில் உள்ள அவரது நிலத்தில் கொள்ளு பயிரிட்டுள்ளார். இந்த பயிரியின் அறுவடைக்காக நேற்று விடியற்காலை பூவகவுண்டன் ஏரி பகுதியிக்கு சாம்பசிவம் சென்றார். அப்போது அவரை வனப்பகுதியில் பதுங்கிருந்த யானை துரத்திச் சென்று தூக்கி வீசி, காலால் மிதித்துக் கொன்றது. யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர், அலட்சியம் காட்டுவதாகவும், அதனால் உயிர் இழப்பு ஏற்படுவதாகவும் கிராமமக்கள் அவரது உடலை எடுத்து வந்து கிருஷ்ணகிரி – குப்பம் சாலை மகாராஜ கடை பஸ் நிறுத்தம் அருகே வைத்து நேற்று காலை 9 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கு, போலீசார் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பகல் 12 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மஞ்சுப்பேட்டை மேலதெரு பகுதியை சேர்ந்த விவசாயி பவுன்ராஜ் (42) என்பவர் மாடு முட்டி படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

The post யானை மிதித்து, காளை முட்டி 2 விவசாயிகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sambasivam ,Maharajagadai ,Krishnagiri district ,Poovakauntan lake ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...