×

தூத்துக்குடியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், புதூர் குறுவட்டம், சிவலார்பட்டி கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்த திரு.முருகேசன் என்பவரின் மகன்கள் செல்வன். மகேஸ்வரன் (வயது 12), செல்வன். அருண்குமார் (வயது 9) மற்றும் செல்வன். சுதன் த/பெ. கார்த்திகேயன் (வயது 7) ஆகியோர் (12.5.2023) அன்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தூத்துக்குடியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thuthukaludi ,CM. ,G.K. Stalin ,Chennai ,CM ,Thoothukudi district ,Euthulu ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!!