×
Saravana Stores

குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்க வழங்கப்பட்ட உணவூட்டு செலவின தொகை நாள் ஒன்றுக்கு ரூ.2.39 உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, 2-6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் 46 காசு எனவும், எரிபொருளுக்கான செலவினம் 60 காசு எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விவரம் வருமாறு:

The post குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்க வழங்கப்பட்ட உணவூட்டு செலவின தொகை நாள் ஒன்றுக்கு ரூ.2.39 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...