×

21ம் தேதி நடக்கிறது தோட்டக்கலை கல்லூரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி, ஏப்.19: தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 21ம் தேதி பெரியகுளம் அரசினர் தோட்டக்கலைக் கல்லூரியில் நடக்க உள்ளது. தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரியகுளத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள அரசினர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 21ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை, வனத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post 21ம் தேதி நடக்கிறது தோட்டக்கலை கல்லூரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Reduced ,College of Horticulture ,Theni ,Theni District ,Periyakulam Rasinar Horticulture College ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு