×

21 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் நல்லடக்கம்

 

ஓமலூர், நவ.8: ஓமலூர் அருகே, பொட்டியபுரம் கிராமம் கட்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(42). சேலம் ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மேகலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சித் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, நேற்று அவரது உடலுக்கு, ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்திஇ மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் வைக்கப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம்
செய்யப்பட்டது.

The post 21 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Ranjith Kumar ,Kattikaranur ,Pottiapuram ,Salem ,Megala ,
× RELATED வீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது