சென்னை: கோவையில் இருந்து 20 கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக விமானத்தில், சென்னை விமான நிலையம் வந்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் காங்கயம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த எட்டு வயது முதல் 17 வயது உடைய 20 கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கோவையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து வந்துள்ளனர். மூன்று நாள் கல்வி சுற்றளவு வந்துள்ள அவர்கள் இன்று மாமல்லபுரம் சுற்றி பார்க்க உள்ளனர்.
கோவையில் இருந்து 20 கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தனர் #Kovai #Coimbatore #TNSchool #GovernmentSchool #DinakaranNews pic.twitter.com/fpdXmWjvhH
— Dinakaran (@DinakaranNews) April 29, 2023
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். நாளை காலை வண்டலூர், கோட்டூர்புரம் பிர்லா பிளானிட்டோரியம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்க்கின்றனர். நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் எழும்பூர் மியூசியம் மற்றும் கன்னிமாரா நூலகத்தை பார்க்கின்றனர். தொடர்ந்து பிற்பகல் ரயிலில் திருப்பூர் திரும்புகின்றனர்.
The post கோவையில் இருந்து 20 கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவிகள் விமானத்தில், சென்னை விமான நிலையம் வருகை! appeared first on Dinakaran.