×

2023 சட்டப் பேரவை கூட்டம் முடித்துவைப்பு: ஆளுநர் அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அரசியலமைப்பு சட்டம் சரத்து 174ல் ஆளுநருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 2023 ஜனவரி 9ம் தேதி முன்னுரையுடன் தொடங்கிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

The post 2023 சட்டப் பேரவை கூட்டம் முடித்துவைப்பு: ஆளுநர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor of Tamil Nadu ,Legislative Assembly of Tamil Nadu ,Governor ,RN ,Ravi ,2023 Legislative Assembly ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...