×

ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நேற்று முன்தினம் துருவ் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு ராணுவ வீரர் பலியானார். ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் என்று அறிவித்துள்ளது.

ஜம்மு–காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து நொறுங்கியது. ராணுவ ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்துள்ளார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர், யூனியன் பிரதேச்ம கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

மலைப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எஞ்சிய 1 பயணியை தேடும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்களும் உடனடியாக கடற்படை ரோந்து கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறிந்து முன்னெச்சரிக்கை சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை ALH Dhruv ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை பாதுகாப்புப் படைகள் நிறுத்தி வைத்துள்ளன. மே 4-ம் தேதி விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ALH துருவ் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

The post ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Defence ,Delhi ,Union Defence Ministry ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...