×

2வது முறையாக மம்தா வழக்கில் நீதிபதி விலகல்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இருந்து மற்றொரு நீதிபதி விலகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தை உலுக்கிய நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ மற்றும் முன்னாள் மேயர் ஆகிய 4 பேரை கடந்த மாதம் 17ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதை கண்டித்து முதல்வர் மம்தா ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த வழக்கில் மாநில அரசின் அழுத்தம் இருப்பதால், வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு நியாயங்களை கூற பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மம்தா தரப்பு அனுமதி கோரியது. ஆனால் உயர் நீதிமன்றம் மறுத்ததால், இதை எதிர்த்து முதல்வர் மம்தா மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், முதல்வர் மம்தா வழக்கை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதிபதி அனிருத்தா போஸ் விலகுவதாக நேற்று தெரிவித்தார். இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். இதற்கு முன், கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகினார். அவரும் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 2வது முறையாக மம்தா வழக்கில் நீதிபதி விலகல் appeared first on Dinakaran.

Tags : Mamata ,New Delhi ,Supreme Court ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...