×

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவு அளித்துள்ளார். ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனிடையே நடப்பாண்டு முதல் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் கல்வி துறையானது சி.பி.எஸ்.சி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த சி.பி.எஸ்.சி பாடப்பிரிவு தொடங்கவுள்ளது.

இதன் இடையே 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி ஆக முடியும் என 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் நடப்பாண்டு முதல் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமல் படுத்தவுள்ளதால் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களும், தேர்ச்சி அடைந்ததாக கல்வி துறை இயக்குனர் பிரியா தர்ஷினி அறிவித்துள்ளார். மேலும் 2023-24ம் ஆண்டு இந்த சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமல் படுத்தவுள்ளதால் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry Government Schools ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை