×

1,689 கோடி கோயில் நிலம் மீட்பு உள்பட அறநிலையத்துறை சார்பில் 8 மாதத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கோயில்களில் பக்தர்களின் தேவையான வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மகாதேசிகன், அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன், சு.கி.சிவம், கருமுத்து கண்ணன், சத்தியவேல் முருகனார், ராமசுப்பிரணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், என் மனதைத் தொட்ட பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக 725 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ்  58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னைத் தமிழில்  அர்ச்சனை  செய்யும் திட்டம்  முதுநிலை கோயில்களில்  அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கரதம் ஆகியன உலா வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் போற்றத்தக்க வகையிலும், பாரட்டத்தக்க வகையிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கோயில்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைமுக்கிய கோயில்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில், கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாட்டு அறையை ேநற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்….

The post 1,689 கோடி கோயில் நிலம் மீட்பு உள்பட அறநிலையத்துறை சார்பில் 8 மாதத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...