×

15 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் குற்றச்செயலில் சம்பாதிக்கும் சொத்துகள் முடக்கப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை தமிழக காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட கஞ்சா ஆபரேஷன் வேட்டையில், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று நாட்களில் (நேற்று வரை) 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post 15 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் குற்றச்செயலில் சம்பாதிக்கும் சொத்துகள் முடக்கப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : DGP ,Shailendra Babu ,Chennai ,Tamil Nadu ,Ganja, Gutka ,Dinakaran ,
× RELATED சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்