×

15ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த கோவை கலெக்டரிடம் கமல் மனு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், நேற்று முன்தினம்  கோவை வந்தார். நேற்று அவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், வரும் 15ம் தேதி கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும்  கிராம சபைக்கூட்டங்கள் நடத்த வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 243-ஏ மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2020 ஜனவரிக்கு பின் கிராம சபை கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது  குறை. இதனை மனுவாக அளித்துள்ளோம். மேலும், பட்ஜெட்டில் கிராம சபைக்கு என  தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும். அடுத்த கிராம சபை விரைவில்  நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.மநீம நிர்வாகிகள் 100 பேர் மீது வழக்கு:  கோவை விமான நிலையத்தில் கமலை  வரவேற்க மநீம நிர்வாகிகள், தொண்டர்கள் மாஸ்க் அணியாமலும், தனி நபர் இடைவெளி கடைப்பிடிக்காமலும் குவிந்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீசார், மநீம மாநில  துணைத்தலைவர் தங்கவேல், மாநில செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் உள்பட 100 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம், அனுமதியின்றி கூடுதல் போன்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்….

The post 15ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த கோவை கலெக்டரிடம் கமல் மனு appeared first on Dinakaran.

Tags : Kamal ,Coimbatore Collector ,Gram Sabha ,Coimbatore ,Kamal Neeti Mayyam ,Kamal Manu ,Dinakaran ,
× RELATED ஆண்டிமடம் கிராம சபை கூட்டம்