×

12 அரசு கலை கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்க உத்தரவு..!!

சென்னை: 12 அரசு கலை கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு பதிலாக வேலைவாய்ப்பு அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 12 அரசு கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை நீக்கி புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க ஆணையிட்டுள்ளது. B கணினி அறிவியல், வணிக நிர்வாகவியல், உயிரி தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களை சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது. 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

The post 12 அரசு கலை கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : 12 Govt Arts Colleges ,CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...