×

திருத்தணி, சென்னையில் 106 டிகிரி வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இதற்கிடையே, பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக திருத்தணி, சென்னை, வேலூர், திருவள்ளூர், மதுரை மாவட்டங்்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தருமபுரி, கரூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவி 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கணிசமாக அதிகரித்தது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக குன்றத்தூரில் 50மிமீ மழை பெய்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருமழை பெரும்பாலான இடங்களில் பெய்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிரப் புயல் மேலும் இன்று வலுப்பெறும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரம் அடைந்து 15ம் தேதி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து சவுராஷ்ட்ரா- கட்ச் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் கராச்சி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 100 டிகிரி முதல் 104 டிகிரி அளவில் இருக்கும். சென்னையில் நகரின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பம் 104 டிகிரி வரை இருக்கும்.

The post திருத்தணி, சென்னையில் 106 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : Tiruthani, Chennai ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு...