×

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

*கலெக்டர் பங்கேற்பு

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே 10 ஆயிரம் பனை விதைகளை நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நேற்று அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 10 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi ,Bhaskara Pandian ,Dinakaran ,
× RELATED (தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய...