×

10ம் வகுப்பு பொதுத்தேர்வை22,921 மாணவர்கள் எழுதுகின்றனர்

தூத்துக்குடி, ஏப். 6: தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 22,921 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் பிளஸ்1 பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், இன்று (6ம் தேதி) துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 107 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 310 பள்ளிகளில் பயிலும் 22,921 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 230 மாற்றுத்திறனாளிகள். 10ம் வகுப்பு தேர்வுக்காக மாவட்டத்தில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் காப்பகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் காப்பகங்களில் இருந்து வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல 22 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 214 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வை
22,921 மாணவர்கள் எழுதுகின்றனர்
appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து...