×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியதுகுமரியில் 23,132 பேர் எழுதினர்185 பேர் ஆப்சென்ட்

நாகர்கோவில், ஏப்.7: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. முதலாமாண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி துவங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி அன்று முடிகிறது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 66 தேர்வு மையங்கள் மற்றும் ஒரு தனித்தேர்வு மையத்தில் என மொத்தம் 11 ஆயிரத்து 827 மாணவ, மாணவியர்களும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்கள் மற்றும் ஒரு தனித்தேர்வு மையத்தில் என 11 ஆயிரத்து 497 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 114 தேர்வு மையங்கள், 2 தனித்தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 324 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தது.

இதில் 23,132 பேர் தேர்வு எழுதினர். 185 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதுபோன்று தனித்தேர்வர்களில் 151 பேர் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டிருந்ததில் 131 பேர் தேர்வு எழுதினர். 20 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை.
முன்னதாக பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பெறப்பட்டு, வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கி காவலர்களின் பாதுகாப்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் தேர்வு வேளையில் தனி வாகனங்கள் மூலம் நேரடியாக தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கி காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் 125 நிலையான படையினரும், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய 100 பறக்கும் படைகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுத்தேர்வு கண்காணிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிறப்பு அலுவலராக துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சிறப்பு அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மேற்பார்வை அலுவலர்களாக செயல்படுவார்கள். குமரி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்படி தேர்வு மையங்கள், வழித்தட வாகனங்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் சுமார் 3500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை குமரி மாவட்ட கலெக்டர் தர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உடனிருந்தார்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
குமரியில் 23,132 பேர் எழுதினர்
185 பேர் ஆப்சென்ட்
appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Tamilnadu ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி