×

ஐடி நிறுவன ஊழியரின் ஆதார், பான் கார்டுகளை பெற்று போலி ஆவணம் தயாரித்து கொடுத்து வங்கிகளில் ரூ.1.8 கோடி லோன் ேமாசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

சென்னை: சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் அஸ்வின்குமார், கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், நான், எனது மனைவி ஆகியோர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். வேளச்சேரியில் இயங்கி வரும் ஐடி நிறுவன இயக்குநர் லட்சுமி நாராயணன் என்பவர் எங்களை தொடர்பு கொண்டார். அவர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 1.5 சதவீதம் லாப தொகை தருவதாக ஆசைவார்த்தை கூறினார். மேலும், தனக்கு தெரிந்த வங்கி அதிகாரிகள் மூலம், வீட்டு லோன் மற்றும் தொழில் செய்ய வங்கிகளில் லோன் வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். இதனால் அவர் கேட்டபடி எங்களுடைய மாத ஊதியத்திற்கான பே சிலிப், ஆதார், பான் கார்டுகள் கொடுத்தோம். ஆனால், அவர் எங்களுக்கு தெரியாமல் எங்கள் பெயரில் வங்கிகளில் லோன் படிவங்களில் எங்கள் கையெழுத்துகளை போட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.8 கோடி லோன் பெற்றுள்ளார்.

பிறகு வாங்கிய லோனுக்கு மாத தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் நாங்கள் லோன் பெற்றதாக எங்களை பணம் செலுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். எனவே, எங்களை ஏமாற்றி வீட்டுக்கடன் பெற்று ரூ.1.8 கோடி மோசடி செய்த லட்சுமி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மேனகா விசாரணை நடத்தினார். அதில், தனியார் ஐடி நிறுவனம் நடத்தி வரும் லட்சுமி நாராணயன், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி லோன் வாங்கி தருவதாக பான், ஆதார் கார்டுகள் மற்றும் பே சிலிப் பெற்று அவர்களை போன்ற வங்கிகளில் லோன் பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும், பிளஸ் 2 முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, எனக்கு பல மருத்துவ கல்லூரிகளின் உரிமையாளர்கள், இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரிகளின் முதலாளிகள் தெரியும். உங்களுக்கு சீட்டு வாங்கி தருகிறேன் எனக்கூறி விண்ணப்ப கட்டணத்தை பெற்று ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து வேளச்சேரி விஜயநகர் முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குநர் லட்சுமி நாராயணனை (37) கைது ெசய்தனர். அவரிடம் இருந்து வங்கிகளில் லோன் வாங்க பயன்படுத்திய போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஐடி நிறுவன ஊழியரின் ஆதார், பான் கார்டுகளை பெற்று போலி ஆவணம் தயாரித்து கொடுத்து வங்கிகளில் ரூ.1.8 கோடி லோன் ேமாசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Chennai ,Ashwin Kumar ,Dinakaran ,
× RELATED அஞ்சலகங்களில் நாளை ஆதார் சேவை நேரம் அதிகரிப்பு