நாசரேத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

நாசரேத்,  டிச. 2: நாசரேத்தில் பெனியேல் டி.வி., டிவைன் சிங்கர்ஸ்., பிஓடி மீடியா சார்பில்   கிறிஸ்துமஸ், புத்தாண்டு  சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சிறந்த பாடகர், பாடகிகள், சிறந்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு  விருதுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் வாழ்த்திப் பேசினார். சர்ச் ஆப்காட் சபை போதகர் டேனியல்பிரைட் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.  திமுக மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், நாசரேத் நகர வணிகர் சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ்  முன்னிலை வகித்தனர்.

  இதில் திமுக  மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், நாசரேத் நகரச் செயலாளர் ரவி செல்வக்குமார், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருண் சாமுவேல், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பு தங்கபாண்டியன், சாமுவேல், தொண்டர் அணி ஞானராஜ், வார்டு செயலாளர் அதிசயமணி நல்லதுரை, வக்கீல் கிருபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.டிவைன் ஆர்கெஸ்ட்ரா நிறுவனர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: