வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் பெரும் திரளானோர் பங்கேற்பு

திண்டுக்கல், செப்.29: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக என்.பஞ்சம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசினார். மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் மருதாம்பாள் ஆல்பர்ட், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், ஒன்றிய துணை செயலாளர் வசந்தா கென்னடி, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், ஒன்றிய கவுன்சிலர் காணிக்கைராஜ், மாவட்ட பிரதிநிதி தங்கவேல், ஊராட்சி செயலர் ஜான்கென்னடி கலந்துகொண்டனர். சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் லூர்துசாமி நன்றி கூறினார்.

கோபால்பட்டி:  சாணார்பட்டி அருகே  கம்பிளியம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமை வகித்தார். நத்தம் எம்எல்ஏ ஆண்டி அம்பலம் கலந்து கொண்டார். திமுக ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், மோகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மதிமுக  ஒன்றிய செயலாளர் பாலகுரு, சாணார்பட்டி ஒன்றிய சேர்மன் பழனியம்மாள் சுந்தரம் கலந்து கொண்டனர். கம்பிளியம்பட்டி திமுக ஊராட்சி செயலாளர் வீராச்சாமி நன்றி கூறினார்.

நத்தம்:  நத்தம் அருகே  செந்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை  தாங்கினார். திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட்  மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர்  பழனியப்பன், திமுக வடக்கு ஒன்றிய பொறுப்புகுழு அழகர்சாமி, பாக்கியலட்சுமி  சிவஞானம், ஜோதி, தங்கபாண்டி, கலிபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரத்தில்  சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட  இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், விசிக மாவட்ட செயலாளர்  ஜான்சன்கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திண்டுக்கல்:  திண்டுக்கல்  மாநகராட்சி அலுவலகம் அருகில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்  ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற  உறுப்பினர் வேலுச்சாமி, அவை தலைவர் பசீர் அகமது, நகர செயலாளர் ராஜப்பா,  மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்  கண்ணன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி, மாநகர மாவட்ட தலைவர்  சொக்கலிங்கம், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், விசிக முன்னாள் மாவட்ட  செயலாளர் அன்பரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கஸ் வளவன், மார்க்சிஸ்ட்  மாநில குழு உறுப்பினர் பாண்டி பங்கேற்றனர். வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பாக விராலிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் மணி முருகன் தலைமை வகித்தார். நிலக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.   

பட்டிவீரன்பட்டி:  அய்யம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், நகர திமுக செயலாளர் அய்யப்பன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அழகர், மார்க்சிஸ்ட் கட்சி வட்டார தலைவர் பிச்சைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொடைக்கானல்:  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு நகர திமுக செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்மலையில் ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டியன், மேல்மலையில் ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் நடந்த போராட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.   

வேடசந்தூர்:  வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் நகர செயலாளர் கார்த்திகேயன்,  தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா, கோவிலூர் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்டி சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடமதுரை ஒன்றியத்தில்  ஒன்றிய செயலாளர் சுப்பையன், தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் பங்கேற்றனர்.

Related Stories: