திண்டுக்கல் மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடை சேவை துவக்கம்

திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல்லில் அம்மா நகரும் நியாய விலை கடை சேவை துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகிக்க, அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா  நகரும் நியாய விலைக்  கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 157 நியாயவிலை கடைகளுக்குட்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்’ என்றார். தொடர்ந்து அமைச்சர் அடியனூத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த 6 பயனாளிகளுக்கு பசுமை வீட்டிற்கான பணி ஆணையினை வழங்கினார்.

 இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..

Related Stories: