தாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி

கரூர், மார்ச் 20: கரூர் தாந்தோணிமலையில் உள்ள பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயிலில் பக்தர்கள் கைகளை கழுவும் வகையில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முக்கிய கோயில்களும் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளன. தாந்தோணிமலையில் உள்ள  பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 29ம்தேதி முதல் ஏப்ரல் 9ம்தேதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் 29ம்தேதி கம்பம் நடும் விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதி தாக்கம் அதிகமாக உள்ளதால், வரும் பக்தர்கள் நலன் கருதி, இந்த கோயில் நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி கலவை கொண்ட மருந்து பேரல்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரனோ வைரஸ் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோயிலில் முன்பாக விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளை நன்கு கழுவிய பிறகே உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: