நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை பொன்னமராவதி பூலாங்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா வலை, தூரி மூலம் விரால், சிலேபி மீன்களை பிடித்தனர்

பொன்னமராவதி,மார்ச் 20: பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சியில் மீன்பிடித்திருவிழா நடந்தது. பொன்னமராவதி பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்மாய் மற்றும் குளம், ஏந்தல்கள் உள்ளது.இந்த நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி இதில் அதிக அளவு மீன்கள் வளரும். கண்மாய் தண்ணீர் குறைந்தவுடன் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மீன் பிடித்திருவிழா நடததுவது வழக்கம். இதில் வலை, தூரி, ஊத்தா, கச்சா போன்றவை மூலம் மீன்பிடித்துச்சென்று தங்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்று குழம்பு வைத்து சாப்பிடுவர். இதனால் மீன்பிடித்திருவிழா நடக்கும் பகுதியில் ஊரே மீன் குழம்பு மணக்கும். இந்த அளவிற்கு நடக்கும்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சரிவர மழைபெய்யவில்லை. இதனால் கண்மாய்களில் தண்ணீர் இல்லை. மீன் பெருக வாய்ப்பில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் பெருகி இருந்த தண்ணீர் குறைந்துள்ளதால் பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி மதகுக்கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. வலை, தூரி மூலம் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்ளை பிடித்தனர். இதில் விரால், சிலேப்பி, அயிரை, கெழுத்தி உள்ளிட்ட வகை மீன்கள் பிடிபட்டன.

Related Stories: