சானிடைசர், மாஸ்க் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தேனி, மார்ச் 20: கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதனைக்கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று கூறியதாவது : கொரோனா அறிகுறி அறிந்து கொள்ளும் முறை மற்றும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நகராடசி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கை கழுவுதல் முறை செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபவடுதற்காக வருகிற 31ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு விழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றுகின்ற அலுவலர்கள், பணியாளர்கள், உரிமையாளர்கள் தங்களது இடத்திற்குள் நுழையும் முன்பாக கை கழுவும் திரவத்தை கொண்டு சுத்தமாக கை கழுவிவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 முதல் 15 முறையாவது கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்றவற்றை தொடுவதை தவிர்த்திட வேண்டும். இருமும்போது, தும்மும்போதும் வாய், மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ளவேண்டும். காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் இருந்தால் அரசு மருத்துவமனைகளை உடனே அணுகி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே மருந்துக்கடைகளில மருந்துகளை வாங்கக் கூடாது.

மருந்துக்கடைகளிலும் டாக்டர்களின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்க கூடாது. கைகளை சுத்தம் செய்யும் திரவங்கள், மாஸ்க் உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்களை மருந்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மருந்துக்கடை, உரிமையாளர்கள் பதுக்கி வைத்து சந்தைப்படுத்துதல் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தர் சட்டரீதியான குற்றவியல நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்தார்.

Related Stories: