பட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது

பட்டிவீரன்பட்டி, மார்ச் 20: பட்டிவீரன்பட்டியில் காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் 29வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 3ம் தேதி சாமி சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து 17ம் தேதி எல்லை காவல்காரன் சாமி கோயிலிலிருந்து காளியம்மன் பகவதியம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், 18ம் தேதி மாவிளக்கு அக்கினிசட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து நேற்று காலை திருவிளக்கு பூஜையும், தெப்பத்திருவிழா, அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளல், முளைபாரி எடுத்தல், பூச்செரிதல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும், மாலை அம்மன் சர்வ அலங்காரத்தில் நகர் வலம் வந்து பூஞ்சோலைக்கு சென்றடைதலுடன் திருவிழா நிறைவுபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: