கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து

தர்மபுரி, மார்ச் 20: ெகாரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நடப்பாண்டு யுகாதித் திருவிழாவையொட்டி, மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு தர்மபுரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் சிவாரத்திரி திருவிழா மற்றும் யுகாதி திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படும். நடப்பாண்டில் ெகாரோனா வைரஸ் பாதிப்பையொட்டி, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வரும் 25ம் தேதி, யுகாதி திருவிழாவுக்கு சிறப்பு வழிபாட்டுக்காக, மாதேஸ்வரன் மலை கோயிலிக்கு பக்தர்கள் வரவேண்டாம் எனவும், மேலும் சிறப்பு வாகன போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யுகாதி திருவிழாவையொட்டி, வருகிற மார்ச் 24 மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் பக்தர்களின் வசதிக்காக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்து இயக்கவிருந்த அரசு சிறப்பு பேருந்துகளின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரசு போக்குவரத்துத்துறைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: