கொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு

நெல்லிக்குப்பம், மார்ச் 20:   நெல்லிக்குப்பம் ஓசூர் அம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் குறித்து கையை கழுவுதல் பற்றி விளக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 நெல்லிக்குப்பம் ஓசூர் அம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமை தாங்கி கொரோனா வைரஸ் நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கைகளை சோப்பு மூலம் கை கழுவுவது பற்றி விளக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களின் கை படும் இடங்களில் கொரோனா நோய் ஒழிப்பு கிருமி

நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது கோயில் கணக்கர் சரவணன், அர்ச்சகர்கள் ராதாகிருஷ்ணன், பாக்கியராஜ், ஹரி, முருகன், குமார், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: