இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, மார்ச் 20:     கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்களுக்கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயமங்கலம், முதன்மை சார்பு நீதிபதி ராஜலிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி லதா, நீதிபதிகள் ரெகனாபேகம், பத்மபிரியா, செல்வரசி, ராஜேஸ்வரி, மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நீதிமன்றத்திற்கு பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள், வக்கீல் மற்றும் நீதிமன்ற அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற நேரங்களில் நீதிமன்ற வளாகத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பங்கஜம், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு 20 விநாடிகள் கைகழுவுவது குறித்து செயல்விளக்கம் அளித்தார். மேலும் மினிதிரை மூலமாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தலைவர் குப்புசாமி, செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் அர்ச்சனா, பொருளாளர் இளவரசு, நூலகர் அய்யப்பன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நிர்மல்சுபச்சந்திரன், வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் செல்வராசு மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: